சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் (பெருந்துறை) பேசியதாவது: மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தகுதிகள் அதிகமாகவும், விதிகள் கடுமையாகவும் உள்ளன.