ராஜ்கோட்: அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இந்தத் தொடரின் முதல் ஆட்டம் இன்று காலை 11 மணிக்கு ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
இந்திய அணி ஸ்மிருதி மந்தனா தலைமையில் களமிறங்குகிறது. அயர்லாந்து அணி கேபி லூயிஸ் தலைமையில் விளையாடுகிறது. இரு அணிகளும் ஒருநாள் போட்டிகளில் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் ஒரு முறை கூட அயர்லாந்து அணி, இந்தியாவை வென்றது இல்லை. இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜினியோ சினிமா செயலி நேரடி ஒளிபரப்பு செய்கிறது.