ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் சீனியர் மகளிர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ டிவிஷனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் – உத்தரபிரதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் மிசோரம் – தமிழ்நாடு அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 0-6 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. மிசோரம் அணி தரப்பில் தேவிகா சென் 2 கோல்களையும் டிம்பிள், லால்தன்ட்லுவாங்கி, தீபிகா, அன்டிம் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.