மும்பை: மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று குண்டு வெடித்தது. இதில் யாரும் காயம் அடையவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ளது ஜியோராய் பகுதி.
இங்குள்ள அர்தா மஸ்லா கிராமத்தின் மசூதி ஒன்றில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் குண்டு வெடித்தது. இதுகுறித்து கிராமத் தலைவர் தலவாடா போலீஸாருக்கு தகவல் அளித்தார். பீட் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நவ்நீத் கன்வத் தலைமையிலான போலீஸார் மசூதிக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.