புனே: மகாராஷ்டிரா ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, இந்தியாவின் நிக்கி கலியாண்டா பூனாச்சா, ஜிம்பாப்வேயின் கர்ட்னி ஜான் லாக் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஜோடி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பிளேக் பெய்ல்டன் மேத்யு, கிறிஸ்டோபர் ரோமியோஸ் ஜோடியை எதிர்கொள்கிறது. இந்த ஜோடி அரை இறுதி சுற்றில் 6-3, 3-6, 10-5 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஜெய் கிளார்க், ஆஸ்திரியாவின் ஜூரிஜ் ரோடியோனோவ் ஜோடியை தோற்கடித்தது.