ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் மூன்றாவது பெரிய குடிசைப் பகுதியாக மும்பையின் தாராவி உள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் உருவான இதன் வரலாற்று பின்னணியில் இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. இதில் ஒன்றாக, 1896-ல் உலகம் முழுவதிலும் பல உயிர்களை பறித்த பிளேக் நோய் தமிழகத்திலும் பரவியது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட தமிழர் குடும்பங்கள் மும்பை புறநகரில் வந்து தங்கியுள்ளன. அப்போது தாரா தேவி கோயில் அங்கிருந்ததால் ‘தாரா தேவி பகுதி’ என்று பிறகு 'தாராவி' என்றும் அப்பகுதி அழைக்கப்பட்டுள்ளது.