பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்திருந்த பப்பர் கல்சா சர்வதேச தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் உ.பி.யில் நேற்று கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை அடுத்த குர்லியான் கிராமத்தைச் சேர்ந்தவர் லஜர் மசி. ஜெர்மனியின் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு) தலைவர் ஸ்வர்ன் சிங் (எ) ஜீவன் பாவ்ஜியுடன் இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் லஜர் நேரடி தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிமன்ற காவலில் இருந்து தப்பிச் சென்ற அவரை பஞ்சாப் போலீஸார் தேடி வந்தனர்.