பிரயாக்ராஜ்: வட இந்தியாவில் இன்று (ஜன.28) மவுனி அமாவாசை என்பதால் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அங்கு சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் காயமடைந்துள்ளனர். காயம் குறித்து மட்டுமே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.