ஈரோடு: பெரியாரை தமிழ்நாட்டிற்கு கொடுத்த மண் ஈரோடு என்று 951 கோடி மதிப்பில் 559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து 222 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழ்நாட்டின் புதிய வரலாற்றுக்கான தொடக்கம் தந்த மண் ஈரோடு. பல புரட்சிகரமான தொடக்கம் விளைந்தது ஈரோட்டு மண்ணில்தான். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு வேதனை தருகிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இழப்பு ஈரோட்டுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் பேரிழப்பு. ஈரோட்டில் ரூ.133 கோடியில் 222 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ரூ.951 கோடியில் முடிவுற்ற 559 திட்டப் பணிகளை திறந்து வைத்துள்ளேன்.
திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாடு மட்டுமல்ல கேரள மக்களும் பாராட்டுகின்றனர். அத்திக்கடவு அவினாசி திட்டத்தை ஆக.14-ல் தொடங்கி வைத்துள்ளோம் 357 ஏரிகளுக்கு நீர் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில் 400 மீட்டர் சின்தடிக் ஓடுதளபாதையுடன் கூடிய கால்பந்து மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்துக்கு திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தந்தை பெரியார் மருத்துவமனையில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டல மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் விரைவில் ஐ.டி. பார்க் அமைக்கப்படும். அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை ரூ.100 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படும்.
சென்னிமலையில் திருப்பூர் குமரனுக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும். சிக்கய நாயக்க கல்லூரியில் ரூ.10 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்படும். 15 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.6 கோடியில் சொந்த கட்டடம் கட்டப்படும். பவானி சங்கமேஸ்வரர் கோயில் உள்பட 3 கோயில்களில் பக்தர்களுக்கு வசதி செய்து தரப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 4.9 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 10,000 மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெறுகின்றனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 71 பாலங்கள் ரூ.201 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர் திட்டங்களை தருவதன் காரணமாக மக்கள் தொடர் வெற்றிகளை தருகின்றனர்.
மக்கள் ஆதரவு திமுக அரசுக்கு கிடைப்பதால் பழனிசாமி புலம்பிக் கொண்டிருக்கிறார். திமுக ஆட்சி மீது குற்றம் சாட்ட எதுவும் கிடைக்காமல் பொய் சொல்லக்கூடாது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்து பொய் சொல்வது அவர் பதவிக்கு அழகல்ல. ஃபெஞ்சல் புயலில் இருந்து பல லட்சம் மக்களை காப்பாற்றினோம். ஒன்றிய அரசின் நிதிக்காக காத்திராமல் நாங்களே மீட்பு பணிகளை செய்து முடித்தோம். முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனூர் அணையை திறந்துவிட்டதாக பொய் சொல்லுகிறார் பழனிசாமி. சாத்தனூர் அணையை திறக்கும் முன்பு 5 முறை முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது.
அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றி திறந்ததால் 200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 23 லட்சம் வீடுகள் நீரில் முழ்கின. வெள்ளத்தில் சென்னை மூழ்கியபோது அரசு எந்திரம் வேலை செய்யவில்லை, தன்னார்வலர்கள்தான் வேலை செய்தனர். செம்பரம்பாக்கம் வெள்ள பாதிப்பு மனிதனால் ஏற்பட்ட பேரழிவு.
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கேட்கும் முன்பே பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தோம். கவுண்டமணி – செந்தில் வாழைப்பழ காமெடி போல பேரவையில் பழனிசாமி திரும்பத் திரும்ப பேசுகிறார் . டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் டெண்டர் விட்ட ஒன்றிய அரசை கண்டிக்காமல் திமுக அரசு மீது குற்றம் சாட்டினார் பழனிசாமி. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ஆதரித்தது அதிமுகதான். பழனிசாமி பேசியதை நேரடியாக ஒளிபரப்பு செய்திருந்தால் ஆட்சியே கவிழ்ந்து போயிருக்கும்என்று பழனிசாமி காமெடியாக பேசினார். தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறது.
The post மக்கள் ஆதரவு திமுக அரசுக்கு கிடைப்பதால் பழனிசாமி புலம்பிக் கொண்டிருக்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.