சென்னை: திருச்சி மக்கள் உடல்நிலை பாதிப்பிலும் இந்து விரோத மனப்பான்மையை திமுக வெளிப்படுத்துகிறது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குடிநீரில் கழிவுநீர் கலந்து இருந்ததால் இந்த பாதிப்பு என்று பத்திரிகை செய்திகள் தெரிவித்தன. பல நகரங்களில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினை எப்போதும் இருந்து வருபவைதான்.