மக்காவ்: மக்காவ் ஒபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் தருண் மன்னே பள்ளி, போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஹாங் காங்கின் லீ சியூக் யியு-வை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 47-ம் நிலை வீரரான இந்தியாவின் தருண் மன்னேபள்ளி, போட்டித் தரவரிசையில் முதலிடத்திலும், உலகத் தரவரிசையில் 15-வது இடத்திலும் உள்ள ஹாங் காங் கின் லீ சியூக் யியு-வை எதிர் கொண்டார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 23 வயதான தருண் 19-21, 21-14, 22-20 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் தரவரிசையில் 87-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹூ ஹி அன்னுடன் மோதுகிறார் தருண்.