இந்திய ரயில்வேயின் முதல் புல்லட் ரயில், கவாச் தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது எனவும், இது சராசரியாக 250 கி.மீ வேகத்தில் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்லட் ரயில் திட்டம் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகள் கூறியதாவது: புல்லட் ரயில் தயாரிப்பை இந்திய ரயில்வே வேகப்படுத்தியுள்ளது. உள்நாட்டில் புல்லட் ரயில்கள் மற்றும் அதிவேக வழித்தடத்துக்கான சிக்னல் கருவிகளை தயாரிப்பதில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் தே.ஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால், புல்லட் ரயில் பணிகள் வேகம் எடுத்துள்ளன. இதற்கான நில கொள்முதல் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன. 320 கி.மீ தூரத்துக்கு புல்லட் ரயிலுக்கான கட்டமைப்பு பணிகள் தயார் நிலையில் உள்ளன.