இம்பால்: மணிப்பூரின் சந்தேல் மாவட்டத்தில் அசாம் ரைபிள்ஸ் படையுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் ராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவு வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா – மியான்மர் எல்லைக்கு அருகில், மணிப்பூரின் சந்தேல் மாவட்டம், நியூ சாம்தால் கிராமத்தில் ஆயுதமேந்திய நபர்களின் நடமாட்டம் இருப்பதாக புதன்கிழமை உளவுத் தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் அசாம் ரைபிள்ஸ் படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.