சுந்தர்.சி இயக்கத்தில், விஷால், சந்தானம், அஞ்சலி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மதகஜராஜா’. விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். ஜெமினி பிலிம் சர்கியூட் தயாரித்தது. 12 வருடத்துக்கு முன் உருவான இந்தப் படம் கடந்த 12-ம் தேதி வெளியாகி, வெற்றி பெற்றதை அடுத்து இதன் ‘சக்சஸ் மீட்’ சென்னையில் நடந்தது.
இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, “இதுவரை நான் எந்தப் படத்துக்கும் ‘சக்சஸ் மீட்’ வைத்ததில்லை. ‘அரண்மனை 4’ படத்துக்கு கூட கேட்டார்கள். ஆனால், இதற்கு சக்சஸ் மீட் வைப்பதற்குக் காரணம், இது மற்ற படங்களை விட சிறப்பு வாய்ந்தது. ‘12 வருடம் கழித்து இந்தப் படம் வருகிறது, என்ன சாதித்துவிடப் போகிறது’ என்று கூட சொன்னார்கள். ஆனால் இந்தப் படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. ரசிகர்கள் வெற்றியடைய வைத்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய வெற்றி. இந்தப் படத்துக்காக விஷால் அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறார். ஒரு நாள் விஷாலின் டிரைவர் போன் பண்ணி, ‘சார், கார்ல மயங்கி விழுந்துட்டார்’ என்று சொன்னார்.