சென்னை: மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுல விரோதம், மனித தன்மை அற்றது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது என காஷ்மீர் தாக்குதலுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று காஷ்மீர் மாநிலத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் இந்திய இராணுவ உடையில் வந்து அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை ஈவிரக்கமின்றி படுகொலை செய்துள்ளனர். அதிலும் கொடுமையானது அவர்களின் மதத்தை கேட்டு, உடைகளை களைந்து உடல் உறுப்புகளை பார்த்து உறுதி செய்த பிறகு கொன்றுள்ளனர்.