சென்னை: கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியல் இனத்தவராக அடையாளப்படுத்த முடியாது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்பதாக அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியைச் சார்ந்த செல்வராணி என்பவர் ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவர். இவர் தன்னை இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் (பட்டியல் சமுதாயம்) சார்ந்தவர் எனக் கூறி சாதி சான்றிதழ் கோரியுள்ளார். சான்றிதழ் சரிபார்ப்பின் போது அவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டு அவரது விண்ணப்பத்தை புதுச்சேரி மாநில அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.