சென்னை: மதியம் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் லேசான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 89.6 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 78.8-80.6 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் ஆய்வு: சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக மழை தொடரும் நிலையில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த அவசர கால கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஆய்வு செய்தார்.