சென்னை: சட்டமன்றத்தில் மதுரவாயல் உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி பேசும்போது, ‘மதுரவாயில் தொகுதி, வளசரவாக்கம் மண்டலம் 11, 146, 150, 151, 153 ஆகிய வார்டுகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குறைவாக இருக்கிறது. இப்போது இருக்கிற அந்த நீர்தேக்க தொட்டி மூலமாக விநியோகம் செய்வது கஷ்டமாக இருக்கிறது. அதனால், ஏற்கனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கேட்டு அமைச்சரிடத்திலே கடிதம் கொடுத்திருக்கி றேன். அதை நிறைவேற்றி தருவார்களா’ என கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்கையில், ‘சென்னை மாநகரத்தில் கடந்த 4 ஆண்டு காலத்திற்கு முன்பு வரை 900 எம்எல்டி மட்டும்தான் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இப்போது 1100 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது இருக்கின்ற தண்ணீர், அடுத்த கோடைக்காலம் முடிந்தபிறகும் நம்மால் தண்ணீர் கொடுக்கக்கூடிய அளவிற்கு தண்ணீர் இருப்பு அதிகமாக இருக்கிறது.
இப்போது நமது முதல்வர், ஏற்கனவே உறுப்பினர் சொன்னது மாதிரி ஒவ்வொரு இடத்திலும் வீராணம் திட்டம், புயல், பூண்டி, தேர்வாய் கண்டிகையில் இருந்து வருகின்றபோது ஒரு இடத்தில் தண்ணீர் அதிகமாக கிடைக்கிறது, ஒரு இடத்தில் தண்ணீர் குறைவாக வருகின்றபோது அதையெல்லாம் இணைத்து எப்படி சுற்றுச்சாலை போடுவது போல சுற்றுச்சாலை மெயின் குழாய்களின் மூலமாக சென்னை முழுவதும் இணைக்கின்ற திட்டத்திற்காக இந்தாண்டு கணக்கெடுக்கப்பட்டு, அதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். உறுப்பினர் சொன்னதுபோல விநியோகிப்பதற்கு ஒரே சீராக இருப்பதற்கு எந்தெந்த இடங்களிலே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீண்டும் வேண்டும் என்பதை கண்டிறிந்து அந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
The post மதுரவாயலில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்படுமா?.. கணபதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.