சென்னை: மதுரவாயல் – துறைமுகம் உயர்மட்ட சாலைக்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் என சட்டப்பேரவையில் ஈஸ்வரன் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார். மதுரவாயல் – துறைமுகம் உயர்மட்ட சாலை பணிகள் தொடர்பாக சட்டப்பேரவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர் ஈஸ்வரன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 16 ஆண்டுகளுக்கு முன்பு மதுரவாயல் துறைமுகம் உயர்மட்ட சாலை திட்டமிடப்பட்டது. மதுரவாயல் – துறைமுகம் உயர்மட்ட சாலைக்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் என தீர்மானத்தில் முன்மொழிந்தார். இத்தகைய ஈஸ்வரன் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் தெரிவித்தார்.
அதில், உயர்மட்ட சாலையை விரைந்து கட்ட வேண்டும் என்று டெல்லி செல்லும் போது முதல்வர் கோரிக்கை வைத்தார். ரூ.3,570 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை பணிகள் நடைபெறும். 21 கிலோ மீட்டர் 2 பகுதியாக பாலம் அமைய உள்ளது. சாலை பணிகள் தொடர்பாக ஒன்றிய அரசு, மாநில அரசு இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. உயர்மட்ட சாலை பணிகள் தொடர்பாக மாதம் ஒரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. கூவம் ஆற்றில் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாலம் செல்கிறது. கூவம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை வேறு இடத்தில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஒப்பந்த காலம் 2026ம் ஆண்டு வரை உள்ளது. உயர்மட்ட சாலை பாலத்தை விரைவாக கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
The post மதுரவாயல் – துறைமுகம் உயர்மட்ட சாலைக்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும்: கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் appeared first on Dinakaran.