மதுராந்தகம்: மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கரும்பினை அரவை இயந்திரத்தில் போட்டு தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை 1961ம் ஆண்டு ஆயிரம் டன் கரும்பு அரவை திறனுடன் துவங்கப்பட்டது. பின்னர், 2500 டன்னுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர், 2000ம் ஆண்டு ஆலை நலிவுற்ற நிலையில் 2009ம் ஆண்டு வரை அரவை நிறுத்தம் செய்யப்பட்டு ஆலை மூடப்பட்டது.
மீண்டும் 2010ம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் 33 கோடி நிதி உதவியுடன் மீண்டும் அரவை துவங்கப்பட்டது. இந்நிலையில், 2024-25ம் நிதியாண்டில் அரவைப் பருவத்திற்கு கரும்புகள் 4500 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு 1.25 ஆயிரம் டன் அரவை செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 1200 கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள். எனவே, கரும்பு அரவை செய்வதற்காக மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு கரும்பு அரவை இயந்திரத்தில் கரும்பினை போட்டு துவங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம், கலெக்டர் அருண்ராஜ் ஆகியோர் கரும்பு அரவை இயந்திரத்தில் கரும்புகளை போட்டனர். இந்த நிகழ்ச்சியில், செயல் ஆட்சியர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், ஒன்றிய செயலாளர்கள் சத்திய சாய், சிவக்குமார், மாவட்ட கவுன்சிலர் ராஜா ராமகிருஷ்ணன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் துர்கேஷ், நிர்வாகிகள் தனசேகரன், ஆறுமுகம், அரசு உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
The post மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.