மதுரை: கோடைகால தொடங்கியுள்ள நிலையில் மதுரையில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்கள் விற்பனை படு ஜோராக உள்ளது. குறிப்பாக மதுரையில் பெரியார் குளம், மாட்டுத்தாவணி, காய்கறி சந்தை, பழ சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்கள் டன் கணக்கில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோடைகாலம் என்பதால் பொதுமக்கள் தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். மதுரை மாநகர் பகுதிகளில் விற்கப்படும் பழங்களில் ரசாயனம் கலந்து விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம் பாண்டியன் தலைமையில் மதுரை பிபி குளம் பகுதியில் சோதனை நடத்தினர்.
அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1200 கிலோ எடையுள்ள ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் அழிக்கப்பட்டன. ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்களை விற்பனை செய்ய முயன்ற வியாபாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
The post மதுரையில் ரசாயனம் கலந்த 1200 கிலோ தர்பூசணி பழங்கள் பறிமுதல்! appeared first on Dinakaran.