மதுரை: மதுரையில் விசிக கொடிக் கம்ப அனுமதி விவகாரத்தில் ஆர்ஐ, விஏஓ, கிராம உதவியாளரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், சத்திரபட்டி அருகிலுள்ள வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சுமார் 45 அடி கொடி மரம் நடப்பட்டு, அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கொடியை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறி வருவாய்த் துறையினர் ஆட்சேபம் தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த 6-ம் தேதி இரவு வருவாய்த் துறையினர், விசிகவினர் இடையே தகராறு ஏற்பட்டது.