டெக்சாஸ்: மதுரையை போன்று அமெரிக்காவிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. சித்திரை திருவிழாவையொட்டி, மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதைபோல, அமெரிக்காவிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கு நிகழ்வு நடைபெற்றது.
டெக்சாஸ் மாகாணம் பியர்லாந்தில் மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலில் மதுரையில் நடப்பது போன்று முதல் முறையாக கள்ளழகர் திருவிழா கொண்டாடுவதற்கு கோயில் நிர்வாகிகள் திட்டமிட்டனர். அதன்படி, அமெரிக்க வாழ் தமிழர்களிடம் நிதியுதவி பெற்றனர். இதையடுத்து, கள்ளழகர் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். பின்னர், மீனாட்சி கும்பம் கோயிலில் நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவை நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து கொண்டாடினர். சடங்குகள், பாரம்பரிய ஊர்வலங்களோடு நடந்த திருவிழாவில் குதிரை வாகனத்தில் கள்ளழகர் கம்பீரமாக சவாரி செய்தார்.
The post மதுரையை போன்று அமெரிக்காவிலும் நடந்த கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: கொண்டாடி மகிழ்ந்த தமிழர்கள்! appeared first on Dinakaran.