மதுரை : மதுரை-தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தில் தமிழ்நாடு அரசுடன் நிலப்பிரச்சனை இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஜன.10-ம் தேதி சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் செய்தியாளர்களை சந்தித்தார் அஸ்வினி வைஷ்ணவ். அப்போது, கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் மதுரை தூத்துக்குடி திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட கோரியதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது, ஆலையில் எழுந்த இயந்திரங்களின் இரைச்சல் காரணமாக கேள்வியை தெளிவாக கேட்க இயலவில்லை என்றும் மதுரை – தூத்துக்குடி ரயில் பாதையை பொறுத்தவரை அரசுடன் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
The post மதுரை-தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தில் தமிழ்நாடு அரசுடன் நிலப்பிரச்சனை இல்லை : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் appeared first on Dinakaran.