மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (பிப்.4) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் ஆதரவாக வரிச்சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீதும், விவசாயிகள் மீதும் வரிச்சுமைகளை மத்திய அரசு ஏற்றியுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.