மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ-க்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பணியாற்றும் மத்திய கலால் துறை மூத்த அதிகாரி மற்றும் தெற்கு மத்திய ரயில்வே மூத்த அதிகாரி மீது சிபிஐ வழக்குகளை பதிவு செய்தது. இதை எதிர்த்து இரு அதிகாரிகளும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தெலங்கானா அரசு அனுமதி அளிக்காத நிலையில் சிபிஐ பதிவு செய்த வழக்குகள் செல்லாது என்று இருவரும் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டனர். இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது.