மத்திய கைலாஷ் பகுதிகளில் வீட்டுக்கு ஒரு கார் இல்லாமல், வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் கார் இருப்பது தான் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.