
நவி மும்பை: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நவி மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி டிஎல்எஸ் முறையில் 53 ரன்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரின் அரையிறுதிக்கு 4-வது அணியாக இந்தியா முன்னேறி உள்ளது.
முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. தனது 14-வது சதத்தை விளாசிய ஸ்மிருதி மந்தனா 95 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்த நிலையில் பேட்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

