மனைவிக்கு தங்கச்சங்கிலி வாங்கிய சிங்கப்பூர் தமிழருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. குலுக்கலில் அவருக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள பரிசு கிடைத்துள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் சிதம்பரம். தமிழரான இவரது பெற்றோர் தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் சென்று வசித்து வருகின்றனர். 21 ஆண்டுகளாக பாலசுப்பிரமணியம் சிதம்பரம் சிங்கப்பூரில் புராஜக்ட் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.