புதுடெல்லி: “மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குக்கு இடம் ஒதுக்காமல், நிகம்போத் காட் எரியூட்டுத் தலத்தில் நிகழ்த்த வேண்டிய நிலையை உருவாக்கியதன் மூலம் அரசு அவரை முற்றிலுமாக அவமதித்துவிட்டது” என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய அன்னையின் மகத்தான புதல்வரும், சீக்கிய சமூகத்தின் முதல் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை நிகம்போத் காட்டில் நிகழ்த்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியதன் மூலம் தற்போதைய அரசு அவரை முற்றிலும் அவமதித்துள்ளது. அவர் 10 ஆண்டு காலம் இந்தியாவின் பிரதமராக இருந்தவர். அவரது பதவிக் காலத்தில் நாடு பொருளாதார வல்லரசாக மாறியது. அவரது கொள்கைகள் இன்னும் நாட்டின் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவாக உள்ளன.