பெங்களூரு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து கர்நாடக அரசு சார்பில் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று முன் தினம் டெல்லியில் காலமானார். அவரது மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்தகவுடா, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.