சென்னை: ‘மம்மூட்டிக்காக பிரார்த்தனை செய்ததில் என்ன தவறு?’ என நடிகர் மோகன்லால் கூறியுள்ளார். சபரிமலையில் நடிகர் மம்மூட்டியின் இயற்பெயரில் மோகன்லால் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். இந்த ரசீது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
‘நட்பின் அடையாளம்’ என சொல்லி சிலர் மோகன்லால் செயலை பாராட்டினர். அதே நேரத்தில் ‘இஸ்லாமிய மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் மம்மூட்டி. அதனால் மோகன்லாலின் செயல் பெரிய குற்றம். அவர் இஸ்லாமிய மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்’ என பத்திரிகையாளர் அப்துல்லா என்பவர் விமர்சித்திருந்தார். இதை சிலர் ஏற்றுக் கொண்டனர். இது சர்ச்சையானது.