
55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் மம்மூட்டிக்கு ‘பிரம்மயுகம்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.
விருதுக்குழு தலைவரான நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த நிகழ்வில் பேசும்போது தேசிய விருதுகளை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது: “தேசிய திரைப்பட விருதுகள் சமரசம் செய்யப்பட்டவை என்று சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. கேரளாவில் ஒரு ஜூரி தலைவராக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் அவர்கள் என்னை அழைத்தபோது, எங்களுக்கு அனுபவம் வாய்ந்த ஒரு வெளிநபர் தேவை என்றும், உங்கள் முடிவுகளில் எப்போதும் நாங்கள் தலையிடமாட்டோம் என்றும் சொன்னார்கள்.

