
புதுடெல்லி: மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நார்வேவில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது.
2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.

