சென்னை: சென்னை வந்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், அம்மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் குறித்தும் முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுவாரா? என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், "தமிழகத்திற்கு வருகை தந்திருக்கிற கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து தமிழகத்திற்குள் கொட்டாதீர்கள் என்றும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முடிவை கைவிடுங்கள் என்றும், தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை நாங்கள் சகோதரத்துவ உணர்வோடு கேரள மாநிலத்திற்கு வழங்கி வருகிறோம்.