சென்னை : இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவக் கட்டமைப்பு அதிகமாக உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டி அளித்த அவர், “மருத்துவப் படிப்புகளுக்கான மாநில இட ஒதுக்கீட்டில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். 50% முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு மூலம் 1207 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடும் :அமைச்சர் மா. சுப்பிரமணியன் appeared first on Dinakaran.