கோலாலம்பூர்: மலேசியாவில் இந்த வாரம் பெய்த கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டடுள்ளது. மேலும், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசியாவில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலேசியாவில் கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தால் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த ஒரு வாரத்தில், ஏழு மாநிலங்களில் உள்ள 80,589 பேர், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 467 தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது. பலியானவர்கள் குறித்தான எந்தவொரு தகவலும் இன்னும் வெளியாகவில்லை.