சென்னை: மலேசியாவில் இருந்து கேரளா சென்று கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் சென்னையில் தரையிறக்கப்பட்டது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் 158 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 166 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட்டது.
நள்ளிரவு 11.50 மணிக்கு சென்னை வான்வெளியில் விமானம் பறந்து சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் திடீரென்று இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.