கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், மாளவிகா பன்சோட் ஆகியோர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், கனடாவின் பிரையன் யாங்கை எதிர்த்து விளையாடினார். இதில் பிரணாய் 21-12, 17-21, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் பிரணாய், போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சீனாவின் ஷி ஃபெங் லுயை எதிர்கொள்கிறார்.