‘பிக் பாஸ் போட்டியில் தனக்கு கிடைத்த ஆதரவு குறித்து உருக்கமாக வீடியோ பதிவு ஒன்றை முத்துக்குமரன் வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ் – சீசன் 8’ நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது. இதில் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாகியுள்ளார். பிக் பாஸ் வெற்றியைத் தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் பிக் பாஸ் வெற்றிக் கோப்பையுடன் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.