கூரைப் பாதுகாப்பு முதல் அறைக்கலன்கள் பாதுகாப்பு வரை, மழைக்கால வீட்டுப் பராமரிப்பில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
கூரைப் பாதுகாப்பு: வீட்டின் கூரையில் தண்ணீர் கசிந்தபிறகு, அதைச் சீரமைத்துக்கொள்ளலாம் என்று காத்திருக்காமல், ஆண்டுக்கு இரண்டு முறையாவது கூரையின் நிலையைச் சரிபார்த்துக்கொள்வது நல்லது. மாடியின் தரைத்தளத்தில் ஏதாவது விரிசல்கள் ஏற்பட்டிருந்தாலோ, தண்ணீர்க் கசிவுக்கான அறிகுறிகள் சுவரில் தெரிந்தாலோ அதை உடனடியாகச் சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை, வீடு கட்டி இருபது ஆண்டுகளுக்கு மேலாகியிருந்தால், கட்டுமான கலைஞர்களை அழைத்து அதன் தரத்தைப் பரிசோதித்து கொள்ளவேண்டியது அவசியம். கூரைகளில் நீர்ப் புகாமல் (water proofing) இருக்கும் தீர்வுகளை இப்போது பல ‘பெயிண்ட்’ நிறுவனங்கள் வழங்குகின்றன.