புது டெல்லி: ஜொமோட்டோ மற்றும் ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் மழைக்காலங்களில் உணவு ஆர்டர் செய்யும்போது இனி கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்விக்கி மற்றும் அதன் ஆன்லைன் உணவு விநியோக போட்டியாளரான ஜொமோட்டோ ஆகியவை மழைக் காலத்துக்கான அதன் கோல்டு உறுப்பினர் சலுகைகளில் புதிய மாற்றத்தை செய்துள்ளது. இதன்படி இன்று முதல் (வெள்ளிக்கிழமை), மழைக் காலத்தின் போது கோல்டு உறுப்பினர்களுக்கு இனி சர்ஜ் கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது. எனவே பணம் செலுத்தும் கோல்டு சந்தாதாரர்கள் கூட இனி மழை பெய்யும்போது உணவு விநியோகத்துக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.