தூத்துக்குடி: தூத்துக்குடி பி அன் டி காலனி பகுதியில் தாழ்வான பகுதிகளில் குட்டைப்போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது. கடந்த 7ம் தேதி மதியம் இப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. இதில் ஒரு குழந்தை சிறிது தூரம் நடந்து வந்து அப்பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் குட்டையில் தவறி விழுந்தது.
இதைப் பார்த்த அப்பகுதியில் நின்றிருந்த வாலிபர் ஒருவர், நொடிப்பொழுதில் விரைந்து வந்து குட்டையில் குதித்து குழந்தையை மீட்டார். சத்தம் கேட்டு அலறியடித்து வந்த தாயிடம் குழந்தையை ஒப்படைத்தார். இக்காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post மழைநீர் குட்டையில் விழுந்த குழந்தை நொடிப்பொழுதில் காப்பாற்றிய வாலிபர் appeared first on Dinakaran.