சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-2026-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச் 19) தாக்கல் செய்தார். ரூ.5,145.52 கோடி மதிப்பீட்டில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி பற்றாக்குறை ரூ.68 கோடியாக இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. துறை வாரியாக வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அதறாகன ஒதுக்கீடுகள் இதோ…
> பேருந்து சாலைகள் : சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் நகர்ப்புர சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு 2025-2026-ஆம் நிதியாண்டுக்கு ரூ.628.35 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.