சென்னை: மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்களா? என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை வலியுறுத்தி உள்ளது. உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
துறையின் ஆணையர் ஆர்.லால்வேனா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார், ஜெபராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது.