சென்னை: தமிழக மாணவ, மாணவிகள், என்னை அப்பா என்று அழைக்கும்போது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பாச உணர்வுதான் முக்கியம் என மகளிர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்தனர். இந் நிலையில், அன்பு சகோதரிகள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவு வருமாறு:
மாதம்தோறும் 1 கோடியே 14 லட்சம் சகோதரிகள் 1000 ரூபாய் உரிமை தொகை பெறுகின்றனர். பதவியேற்று முதல் கையெழுத்து எதுவென்றால் மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்திற்குதான். இந்த திட்டம் மகளிர் சேமிப்பை அதிகரித்துள்ளது. பள்ளியில் படித்து பிறகு கல்லூரியில் சேர முடியாத மாணவிகளுக்கு என தொடங்கப்பட்ட திட்டம்தான் புதுமை பெண் திட்டம். தமிழக மாணவ, மாணவிகள் என்னை அப்பா என்று அழைக்கும்போது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பாச உணர்வுதான் முக்கியம். அன்பு சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post மாணவிகள் என்னை அப்பா என்று அழைக்கும்போது பெரும் மகிழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து appeared first on Dinakaran.