புதுடெல்லி: டெல்லியில் தென் கிழக்கு ஆசிய பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி சத்தர்பூரில் தென் கிழக்கு ஆசிய பல்கலைக்கழகம் (எஸ்ஏயு) உள்ளது. சார்க் நாடுகளால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டு நடத்தப்படும் இந்த சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியா நாடுகளின் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்திய மாணவ, மாணவிகளும் இங்கு படிக்கின்றனர். இந்தப் பல்கலை.யில் நிகழும் தவறுகள் மீது சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.