‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கைக் கதையில் மாதவன் நடிக்கிறார். விளம்பரப் படங்களை இயக்கியுள்ள கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்குகிறார்.
ராக்கெட்ரி படத்தைத் தயாரித்த வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் மூலன், வர்கீஸ் மூலன் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர்.மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.