தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின்கணக்கீட்டு முறை அமல்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் நடந்த அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். இதில் வரும் கோடைகாலத்தில் தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்கு தேவையான மின்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக இதுவரை 48 துணை மின்நிலையங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன. 20 புதிய துணை மின்நிலையங்கள் நிறுவும் பணிகள் நடக்கின்றன. மேலும் தமிழகம் முழுவதும், இயக்கத்தில் உள்ள 260 திறன் மின்மாற்றிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளன, 22 திறன் மின்மாற்றிகளின் தரம் உயர்த்தப்படவுள்ளது பற்றி ஆலோசிக்கப்பட்டது.