சென்னை: பீகார் மாநிலம் சன்வாக் பகுதியை சேர்ந்தவர் முகமது சதாம்(29). இவர் சென்னையில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். பணி முடிந்து நேற்று இரவு எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையை கடந்தார். அப்போது அண்ணாசதுக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த 27பி மாநகர பஸ் காந்தி இர்வின் சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலையை கடந்த முகமது சதாம் மீது பஸ் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பீகார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த மாநகர பஸ் டிரைவர் எழிலரசன்(41) என்பவரை கைது செய்தனர்.
The post மாநகர பஸ் மோதி வாலிபர் பலி: டிரைவர் கைது appeared first on Dinakaran.